அக்கரைப்பற்று சுகாதார, பற்சிகிச்சை நிலையத்திற்கு நீர்க் குழாய் இணைப்பு



(SUHAIB)
அக்கரைப்பற்று தேசிய பாடசாலைக்கு அருகாமையிலுள்ள சுகாதார வள நிலையம் மற்றும் பற்சிகிச்சை நிலையம் திறந்து வைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் சுகாதார வள நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகின்றது.
பற்சிகிச்சை நிலையத்திற்காக பல் வைத்தியர் நியமிக்கப்பட்டு கடமைக்கு சமூகமளிக்கும் நிலையில் நீரிணைப்புப் பெறுவதற்காக விண்ணப்பித்திருந்த போதிலும் அங்கு நீரிணைப்பு இன்று வரையில் வழங்கப்படாததன் காரணமாக பற்சிகிச்சை நடவடிக்கைகள் அங்கு இடம் பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
சுகாதார வள நிலையம் மற்றும் பற்சிகிச்சை நிலையத்திற்கு நீரிணைப்பு வழங்குவதற்காக சுகாதாரத் துறையினரால் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று,நேற்று 2017.11.11 ஆந் திகதி அப்பிரதேசத்திற்கு பிரதான நீர்க்குழாய் பொருத்தப்பட்டுள்ளது.
இன்னும் எதிர்வரும் வாரத்தில் நிரிணைப்பு வழங்கப்படக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.