1050 போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது



திருகோணமலை தலைமை பொலிஸ் காரியாலய பிரிவிற்கு உட்பட்ட உவர்மலை பிரதேசத்தில் 1050 போதை மாத்திரைகளுடன் ஒருவரை விசேட பொலிஸ் அதிரடிப் பிரிவினர் கைது செய்தனர். 

போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவராவார். 

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளின் சந்தைப் பெறுமதி சுமார் 300000 ரூபாய்கள் என அவர்கள் தெரிவித்தனர். 

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகளையும் கைது செய்யப்பட்டவரையும் தலைமை பொலிஸ் காரியாலய பொலிஸார் வசம் ஒப்படைத்தனர்.