(அப்துல்சலாம் யாசீம் )
திருகோணமலை மொறவெவ பிரதேசத்திற்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியூதீன் 10 இலச்சம் ரூபாய் ரொட்டவெவ கிராம அபிவிருத்தி பணிகளுக்கு வழங்குவதாக பொதுமக்கள் மத்தியில் வாக்குறுதியளித்தும் இன்னும் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லையென தெரியவருகின்றது.
மொறவெவ பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கடந்த ஐனவரி மாதம் 08ம் திகதி
ரொட்டவெவயில் இடம் பெற்ற கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ரொட்டவெவ மஸ்ஐிதுல் ஹூதா ஐூம்ஆ பள்ளி வாசல் நிர்வாக சபையினால் பள்ளி வாசல் புணரமைப்பு பணிகள் நடை பெற்று வருவதாகவும் மீதி வேளைகளை செய்வதற்கு நிதி பற்றாக்குறை காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து அபிவிருத்தி பணிகளுக்காக 10இலச்சம் ரூபாய் தருவதாக வாக்குறுதியளித்ததுடன் ரொட்டவெவ பள்ளி வாசல் கட்டிட நிர்மானப்பணிகளை அவர் அன்றைய தினம் பார்வையிட்டாார்.
இதேவேளை வழங்கப்படுகின்ற பணத்தில் ஆறு இலச்சத்தை ரொட்டவெவ மஸ்ஐிதுல் ஹூதா ஐூம்ஆ பள்ளி வாசலுக்கும். இரண்டு இலச்சத்தை ரொட்டவெவ முஸ்லிம் வித்தியாலயத்திற்கும் மற்றைய இரண்டு இலச்சத்தை ஐனாஷா நலன்புரி சங்கத்திற்கும் வழங்குமாறும் அவர் குறிப்பிட்டார்.
இருந்த போதிலும் றிஷாத் பதியூதீன் வழங்கிய வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.
இது குறித்து இன்று வியாழக்கிழமை காலை அமைச்சர் றிஷாத் பதியூதீனின்
(0777487504) தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர் கூட்டமொன்றில் இருப்பதாகவும் ரொட்டவெவ பகுதிக்கு வந்த வேளை தருவதாக வாக்குறுதியளித்தமை உண்மையெனவும் அவரால் எப்போது தருவது என கூறப்படவில்லை எனவும் தெரிவித்தார்.


Post a Comment
Post a Comment