சதம் அடித்தார்,தனஞ்ஞய டி சில்வா





பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியில், இலங்கை அணி வீரர் தனஞ்சய டி சில்வா சதம் அடித்துள்ளார். 

இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்று முன்னர் வரை ஒரு விக்கட் இழப்புக்கு 183 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. 

இலங்கை அணி சார்பாக தனஞ்சய டி சில்வா 100 ஓட்டங்களைப் பெற்றுள்ளதுடன், குசல் மெண்டிஸ் 80 ஓட்டங்களைப் பெற்றுள்ளார். 

பங்களாதேஷ் அணி முதல் இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 513 ஓட்டங்களை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.