கல்முனை, மைமூனா மகளிர் அரபுக் கலாபீடத்தின் அங்குரார்பண விழா நாளை மறுநாள் (01) கல்முனை முஹ்யுத்தீன் மஸ்ஜித்தில் பிற்பகல் 4.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
இவ்விழாவில், பிரதம அதிதியாக மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது எஸ்.எஸ் பத்ஹுல்லாஹ், விஷேட அதிதியாக மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது எஸ்.எம் மஷூர், கெளரவ அதிதியாக மௌலானா மௌலவி அஸ்ஸெய்யிது ஹிபதுல்லாஹ்வும் கலந்து கொள்ள உள்ளனர்.
மௌலவியாக்களை உருவாக்கக்கூடிய, மகளிர் அரபுக் கல்லூரிகள் கல்முனை மாநகரில் குறைவாக காணப்படுவதனால், இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் நோக்கில் மகளிருக்கான மைமூனா மகளிர் அரபுக் கலாபீடம் திறந்து வைக்கப்படவுள்ளது.
இஸ்லாமிய சத்திய கொள்கை விளக்கங்களை மாதர் சமூகத்திற்கு விளக்கி ஒழுக்கப் பாதையில் நடத்திடும் வகையில் ஆத்மீக கல்வியையும், க.பொ.த ச/த , க.பொ.த உ/த ஆகிய லௌகீக கல்விகளை வழங்குவதுடன், பல்வேறு துறைகளான கணனி, தையல் பயிற்சிகளும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Post a Comment
Post a Comment