பாலமுனையில் சந்தேகத்திற்கிடமான ஜனாசா தோண்டப்பட்டது.



(றிபாஸ்)
அட்டாளைச்சேனை, பாலமுனை பனையடி வீதி பாலமுனை-01ல், கடந்த வெள்ளிக் கிழமைஎ 17 ந் திகதியன்று  59 வயது மதிக்கத் தக்க சரிபுத்தம்பி  சித்தியும்மா என்னும் பெண் குளியலறையில், வழுக்கி வீழுந்து மரணித்ததால்,அவரது ஜனாசாவை குடும்ப சிலரால், அன்றைய தினம் பாலமுனை பொது மைதானத்தில் நல்லடக்கம் செய்தனர்.


எனினும், இவரது நகைகள் சில கொள்ளயைடிக்கப்பட்டுள்ளதாலும், இவரது காதில் காயங்கள் ஏற்பட்டுள்தாலும், இவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக அவரது புதல்வன் அக்கரைப்பற்றுப் பொலிஸ் நிலையத்தில் புகாரிட்டிருந்தார். இது தொடர்பாக அக்கரைப்பற்றுப் பொலிசார். இன்று அக்கரைப்பற்று நீதிமன்றில் அறிக்கையைத் தாக்கல் செய்து, குறித்த  ஜனாசாவை தோண்டுவதற்கான அனுமதியையும் கோரினர்.

அக்கரைப்பற்று  கௌரவ நீதிபதி, திரு பீற்றர் போல் முன்னிலையில் பாலமுனையில், இன்று காலை தோண்டி எடுக்கப்பட்டது. குறித்த ஜனாசா சட்ட வைத்திய அதிகாரியின் மேலதிக பரிசோதனைக்கும் அறிக்கைக்கு மாக அம்பாரைக்கு  அனுப்பப்பட்டது