தெமட்டகொட பகுதியில் வைத்து, இளைஞன் ஒருவனை டிபென்டர் ரக வாகனத்தில் கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர, குறித்த வழக்கு தொடர்பில் தவறை ஏற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக, தனது சட்டத்தரணி ஊடாக இன்று (08), நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.
குறித்த வழக்கை விரைவில் நிறைவுக்கு கொண்டுவரும் நோக்கில், இந்த அறிவித்தலை விடுத்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த வழக்கு, டிசெம்பர் மாதம் 11 ஆம் திகதி, மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.


Post a Comment
Post a Comment