எல்ல - வெல்லவாய வீதியில் மண்சரிவு

#LandSlip
கடும் மழையின் காரணமாக எல்ல - வெல்லவாய வீதியில் எல்ல நகரத்தில் இருந்து ராவணன் எல்லை வரையான பகுதிகளில், வீதியின் இரண்டு இடங்கள் மண் சரிவுக்கு உள்ளாகி இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 

மேலதிகமாக பல பகுதிகளில் மண் மேடு சரிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதாக குறிப்பிடப்படுகிறது. 

இதன் காரணமாக குறித்த பகுதியில் வாகனங்களை செலுத்தும்பொழுது அவதானத்துடன் செயற்படவேண்டும் என எல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்த வீதியில் ஒரு நிரலில் மாத்திரமே வாகன போக்குவரத்து இடம்பெறுவதாக பொலிஸார் குறிப்பிட்டனர். 

இந்த வீதி விரிவு படுத்தப்பட்டு காப்பட் இடப்பட்டு சீர்செய்யப்பட்ட போதிலும் குறிப்பிட்ட இடங்களில் பாதுகாப்பு கட்டிடங்கள் அமைக்கப்படாததினால் இந்நிலை ஏற்பட்டிருப்பதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். 

அரச தகவல் திணைக்களம்