அமைச்சுப் பொறுப்புக்கள் தொடர்பில், மீண்டும் மீ உயர் நீதிமன்றில் வழக்கு வருமா?





அடுத்து வரும் 48 மணித்தியாலத்திற்குள் புதிய அமைச்சரவை ஸ்தாபிக்கப்படும் என ஐக்கிய தேசிய கட்சி அறிவித்துள்ளது.
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர் இந்த அறிவிப்பு நேற்று வெளியாகி இருந்தது.
இந்நிலையில் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளத் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சினை ஜனாதிபதி வைத்துத் கொள்வதற்கான சட்டங்கள் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
19 ஆவது அரசியலமைப்பின் 51 சரத்திற்கமைய ஜனாதிபதியினால் தேசிய பாதுகாப்பு, மஹாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடால் அமைச்சுக்களை தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள அதிகாரம் உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அரசியலமைப்பை மீறி செயற்பட்டால் மீண்டும் ஒரு முறை நீதிமன்றத்திற்கு செல்ல நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்த நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பு வெளியாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.