’பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த நீக்கப்படலாம்’



பிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எதிர்வரும் புதன் கிழமை நீக்கப்படுலாம் என பிரபல ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தமிழ்த்​ தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதியின்படி, எதிர்வரும் புதன் கிழமை நாடாளுமன்றில் புதிய பிரதமரை நியமிக்கக்கோரும் பிரேரணை ஒன்று நிறைவேற்றப்பட உள்ளது.
இதனைத் தொடர்ந்து, அது ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பித்து இது தொடர்பான கலந்துரையாடல்களில் ஈடுபடுவார்.