இறக்காமத்தில், காபற் வீதிக்காக வெகுண்டோர், தேசியப் பாடசாலைக்காக ஏன் பாடுபடவில்லை?



அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மிகவும் புராதான கிராமங்களில் எமது இறக்காமப் பிரதேசமும் ஒன்று 14,000  திற்கும் மேற்பட்ட சனத்தொகையைக் கொண்டுள்ளது எமது பிரதேசம்  பெரியளவிலான நீர்வளம், நிலவளத்தையும் கொண்டுள்ள ஓர் இயற்கையான புராதான கிராமம்.

இலக்கியத்துறையிலும்  கலைத்துறையிலும் இன்னும் என்ன  இலங்கையின்  கல்வித்துறையிலும் கரை கண்ட எமது மண்ணுக்கு இன்னும் எமது பிரதேசத்தில் ஒரு சேசியப்பாடசிலை இல்லையே என்னும் ஏக்கம்  தொடர்ந்தும் எமது  மக்களுக்கு இருந்து கொண்டே  இருக்கின்றது.

பாடசாலை அதிபரிலும் , காபட் வீதியிலும்  மாற்றம் வேண்டும் என்று வீதிகளிலும் சமுக வலைத்தளங்களிலும்  காடைத்தனமாக களமிறங்கிய நாம்  பாடசாலையின் தரம் உயர்த்துதலில் மாற்றம் பற்றியும் சிந்திக்க வேண்டும்.  கல்வித்துறையில் கரை கண்ட எமது இறக்காமப்பிரதேசத்தில்  போதிய  துறை சார்ந்த எமதூர் ஆசிரியர்கள் இருந்தும் வெளியூர் ஆசிரியர்களிலும் , வெளியூர் பகுதிநேர டீயூடரிகளிலும் தங்கிவாழ்கின்றோம் என்றால் எந்தளவு எமதூரின் கல்வி வளர்ச்சி இருக்கின்றது என்று  நாம் சிந்திக்க வேண்டும்.

இதுவா கல்வியில் கரை கண்ட ஊர் ? கல்வித்துறையில் பல வளவாளர்களையும் கல்விமான்களையும் கொண்டுள்ள ஊர்??
படித்த  ஒருவர் நமது ஊருக்கு நலவு செய்ய முன்வந்தால் வைக்கோலில் படுத்த நாய்போல் அல்லவா நிக்கின்றோம். !!  இதனால்தான் எமதூரில் படித்த நலம்விரும்பிகள் எவரும் ஊர் நலவுகளிலும் கெடுதியிலும் பங்கெடுப்பதில்லை.

எமது இறக்காமப்பிரதேசத்தில்  மொத்தமாக 12 பாடசாலைகள் உள்ளது .
( இறக்காமத்தில்  4 பாடசாலைகள் , வரிப்பத்தான்சேனையில் 4 பாடசாலைகள் , வாங்காமத்தில் 2 பாடசாலைகள்,குடுவிலில் 01 பாடசாலை , மாணிக்கமடுவில் 01 ) இப்படி 12 பாடசாலைகள் உள்ளது ஒன்றுகூட தேசியப்பாடசாலை இல்லை.

இறக்காமப்பிரதேசத்தில் இருக்கும் பிராந்திய பாடசாலைக்கு வருகின் நிதிகளையும் , கட்டிடங்கையும்  சில அதிகாரிகளுக்கு பிரவாக உணர்வில் சொறண்டத் தெரிகின்றது எமது இறக்காமப்பிரதேசத்தின் தாய்ப்பாடசாலையை தேசியப்பாடசாலையாக மாற்றும் உணர்வு கூட தோன்றவில்லையே !!

எனவே எமது ஊரில் இருக்கும் பாடசாலைகளில் மாற்றம் வேண்டும்.  அல் அஷ்ரப் மத்திய கல்லூரியை தேசியப்பாடசாலையாகத் தரமுயர்த்த வேண்டும்.  அல் அமீன் பாடசாலை மத்திய கல்லூரியாகத் தரமுயர்த் வேண்டும்.  இன்று கிழக்கில் இடம்பெற்றிருக்கும் ஆளுனர் கலாநிதி ஹிஸ்புல்லாவின் நியமனம் எமக்கோர் சாதகம் அதைப் பயன்படுத்துவோம்.

ஒலுவிலில்லுள்ள பாடசாலை , பொத்துவிலில்லுள்ள பாடசாலைகள் ஆளுனர் கலாநிதி ஹிஸ்புல்லாஹ்வினால் மாகாணப்பாடசாலையில் இருந்து தேசியப்பாடசாலையாக தரமுயர்த உறுதிளிக்கப்பட்டுள்ளது. எமது பாடசாலையையும் தரமுயர்த்த எல்லோரும் முயற்சிப்போம்.

மேலே நான் குறிப்பிட் சில விடையங்கள் எல்லோருக்கும் புரியலாம் புரியாமலும் இருக்கலாம். ஏது பிழையாகப் பேசியிருந்தால் மன்னிக்கவும்.

கட்டுரை
A.M ஹபீஸுல் ஹக்.
வரிப்பத்தான்சேனை