வைத்தியர் மர்சூக்காவின் மறைவு -ஏறாவூர் சமூகத்திற்கு பாரிய தொரு இழப்பு

வைத்தியர் மர்சூக்காவின் மறைவு -ஏறாவூர் சமூகத்திற்கு பாரிய தொரு இழப்பாகும்....இராஜாங்க அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா

ஏறாவூரில் பல்வேறு சமுதாய விழுமியங்களையும் சவால்களையும்  தகர்த்துக் கொண்டு ஒரு பெண் வைத்தியராக பரிணமித்து மக்களுக்காய் சேவையாற்றிய பெண் வைத்தியர் மர்சூக்காவின் இழப்பு அவரின் குடும்பத்திற்கும் முழு ஏறாவூருக்கும் -ஏன் முஸ்லிம் சமூகத்திற்கும் பாரிய இழப்பாகும் என சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

ஏறாவூரில் பெண்கள் கல்வியில் சாதிப்பது என்பது ஒரு பெரும் சவாலாக இருந்த காலத்தில்  வைத்தியத்துறைக்கு இரண்டாவது பெண் வைத்தியர் என்ற அடையாளத்தோடு தெரிவாகி அனைத்து சவால்களையும் எதிர்கொண்டு வைத்திய துறைக்கான அத்தனை பண்புகளையும் தன்னகத்தே கொண்டு சாதுவாக பணியை ஆற்றிய ஒரு பெண் ஆளுமை  இன்று எமை விட்டு இறைவன் பால் திரும்பியுள்ளார்.
(இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன் )
அவரது ஈடு செய்ய முடியாத இழப்பினால் நிலை குலைந்து போய் நிற்கும் - அரசியலுக்கு அப்பால் நான் நீண்ட கால உறவினை பேனும் அவரது குடும்பத்திற்கும் ,குறிப்பாக அவரது கணவர் பொறியியலாளர் ரிஸ்வி மற்றும் குழந்தைகள் , சகோதரர்கள் உட்பட அனைவரோடும் எனது ஆழ்ந்த கவலையினை பகிர்வதோடு,
சகோதரி வைத்தியர் மர்சூக்கா வின் அர்ப்பணிப்பு மிக்க பணிகளை வல்ல இறைவன் பொருந்திக் கொண்டு அவருக்கு மேலான சுவனத்தை வழங்கிடுவானாக என உளமார பிரார்த்திக்கிறேன்...
--- Advertisment ---