பதுளை தோட்ட பகுதியில்


(க.கிஷாந்தன்)

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் மலையக மக்களுக்காக நிர்மாணிக்கப்படவுள்ள 4000 தனி வீடமைப்பு வேலைத்திட்டத்திற்கமைய 09.03.2019 அன்று சனிக்கிழமை காலை பதுளை வேவெஸ்ஸ தோட்டத்தில் 50 வீடுகளும், தெல்பெத்த தோட்டத்தில் 50 வீடுகளும் அடங்களாக 100 தனி வீடுகளுக்கு அடிக்கல் நாட்டும் வைபவம் நடைபெற்றது.

மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊடாக இந்த வைபவத்தில் 100 வீடுகளை நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சரும், இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஸ், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார், ஊவா மாகாண சபை உறுப்பினர் ருத்தரதீபன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் பதுளை மாவட்ட இணைப்பாளர் எஸ்.ராஜமாணிக்கம், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகள் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு அடிக்கல்லை நாட்டி வைத்தனர்.

மலையக மக்களின் 200 வருட தொடர்வீட்டு வாழ்க்கை முறைக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கும் இந்தியாவில் இருந்து கடைசியாக வரவழைக்கப்பட்ட மலையக இந்திய வம்சாவளி மக்களுக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலும் இந்திய நிதி உதவியின் கீழ் இந்த புதிய வீடுகள் ஏழு பேர்ச் காணியில் நிர்மாணிக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.