சர்வதேச மகளிர் தினத்தில்,துாக்கிட்ட மாணவி




(க.கிஷாந்தன்)
பொகவந்தலாவ டின்சின் தோட்ட பகுதியில் உள்ள தொழிற்சாலை கொலனி பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்கு வெளி பகுதியில் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தூக்கில் தொங்கிய நிலையில் பாடசாலை மாணவி ஒருவரின் சடலம் 08.03.2019 அன்று வெள்ளிக்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்
மேற்படி மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்ட அவரின் சகோதரி கூச்சலிட்டதையடுத்து பொகவந்தலாவ பொலிஸாருக்கு அறிவிக்கபட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதோடு, தூக்கில் தொங்கிய மாணவியின் கால்கள் இரண்டும் கட்டபட்ட நிலையில் தனது வீட்டின் வெளி பகுதியில் கூறையின் தடியால் தனது தாயின் சேலையால் தூக்கில் தொங்கியவாறு இருந்ததாகவும், பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட மாணவி பொகவந்தலாவ டின்சின் தமிழ் மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கலை பிரிவில் கல்வி கற்ற 18 வயதுடைய முத்துமணி  பிரியவர்ஸினி என்ற மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கபட்டதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
மாணவியின் குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளதோடு, சம்பவ இடத்திற்க்கு கைரேகை பிரிவினர் மற்றும் அட்டன் நீதிமன்ற நீதவான் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த மாணவி சடலமாக மீட்கபட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.