சிறை மீண்டார் ஞானசார



சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு பொது மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி கையொப்பமிட்ட கடிதம் சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இன்று சிறை மீண்டார்

நீதிமன்றத்தை அவமதித்ததாக ஞானசார தேரருக்கு எதிரான வழக்கில் அவர் குற்றவாளியாக இனங்காணப்பட்டு 2018 ஆகஸ்ட் 8 ஆம் திகதி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் ஞானசார தேரருக்கு 19 வருட கடூழிய சிறைத் தண்டனையை 6 வருடங்களில் அனுபவித்து நிறைவு செய்யும் வகையில் தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.