சத்திர சிகிச்சை மூலம் குடும்ப கட்டுப்பாடு செய்தாக வெளியான செய்தி உண்மை இல்லை


தேசிய தவ்ஹீத் ஜமாத்தின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் வைத்தியர் ஒருவரினால் சிங்கள தாய்மார்கள் 4000 இற்கும் அதிகமானவர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு செய்திருக்கதாக பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

குறித்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி உண்மையாயின் அது மிகவும் பாராதூரமான விடயம் என பாராளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். 

இந்த செய்தியினால் முஸ்லிம் வைத்தியர்களிடம் மருத்துவம் பெற்றுக் கொள்வதை ஏனைய மத மக்கள் நிராகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த செய்தி மக்களுக்கு இடையில் பிரச்சினைகளை மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

இதனால் இந்த செய்தி தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இதன்போது கருத்து தெரிவித்த சபாநாயகர், அந்த செய்தியை இன்று காலை பார்த்தவுடன் அது தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் புலனாய்வு பிரிவின் பிரதானிகளிடம் விசாரணை செய்ததாக தெரிவித்துள்ளார். 

இதன்போது குறித்த செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பாதுகாப்பு பிரிவின் பிரதானிகள் தெரிவித்தாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.