வெல்லம்பிட்டிய தொழிற்சாலையில் கைது செய்யப்பட்டவர்கள் பிணையில்

உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவரான மொஹமட் இல்ஹாம் என்பவருக்கு சொந்தமான தொழிற்சாலையிலிருந்து சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 9 நபர்களும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களை தலா 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே உத்தரவிட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர்களுக்கெதிராக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் வெல்லம்பிட்டிய பொலிஸாரினால் காரணங்கள் முன்வைக்கப்படவில்லை என்பதுடன் பிணையை நிராகரிப்பதற்கான போதுமான காரணிகள் பொலிஸாரிடம் காணப்படாததன் காரணமாக அவர்களுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
அதேவேளை குறித்த சம்பத்தில் கைது செய்யப்பட்ட 10வது சந்தேக நபரை மாத்திரம் எதிர்வரும் 22ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.