வெசாக் தின கொண்டாட்டங்கள்




(க.கிஷாந்தன்)
நாடளாவிய ரீதியில் 18.05.2019 அன்று வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் நாடளாவிய ரீதியில் காணப்படும் பௌத்த வணக்கஸ்த்தலங்களில் விஷேட வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதேவேளை மலையகத்தின் பல பாகங்களிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் இடம்பெறுகின்றன. அந்த வகையில் அட்டன், கொட்டகலை, தலவாக்கலை, மஸ்கெலியா, பொகவந்தலாவ, அக்கரப்பத்தனை, நுவரெலியா ஆகிய பகுதிகளிலும் வெசாக் தின கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
இந்த நிகழ்வின் போது இன மத பேதமின்றி கிராம மக்கள் தோட்டப்புர மக்கள், பொலிஸ் அதிகாரிகள், முஸ்லிம், இந்து மக்கள் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு, அட்டன் நீக்ரோதாரம விகாரையிலும் வெசாக் தின விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதோடு, கொண்டாட்டங்களும் இடம்பெற்றன. இந்நிகழ்வின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் விகாரையின் விகாரதிபதியிடம் ஆசிப்பெற்றதோடு, பூஜை வழிபாடுகளிலும் கலந்து கொண்டார்.
இதன்போது அட்டன் டிக்கோயா நகர சபை தலைவர் எஸ்.பாலச்சந்திரன் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.
மலையகத்தில் எவ்வித பாரபட்சமும்