அசாதாரண நிலையை சீர் செய்து சுற்றுலா பயணிகளை வரவழைக்க நடவடிக்கை


(கிரிஷாந்தன்)
ல்லதண்ணி நகர அபிவிருத்தி திட்ட வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதுடன், சிவனொளிபாதமலை புனிதம் பாதுகாப்பு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். 

மஸ்கெலியா நல்லத்தண்ணி சமன் தேவாலயத்தில் இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்துகொண்டு நல்லதண்ணி நகர் அபிவிருத்தி தொடர்பில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

வசந்த காலத்தில் நுவரெலியாவிற்கு உள்நாட்டு வெளிநாட்டு உல்லாச பயணிகள் வருவதை போல புனித பூமியான நல்லதண்ணி சிவனொளிபாத மலைக்கும் யாத்திரிகளும் உல்லாச பயணிகளும் அதிகம் வருகின்றார்கள். 

விசேடமாக பௌத்தம், கிருஸ்துவம் இந்து என பலரும் வந்து செல்லும் தளமாகும். ஆகவே இந்த பிரதேசத்தையும் நவீன முறையில் சுற்றுலா தளமாக அமைக்க வேண்டும். 

அதே போல புனிதளத்தின் புனிதம் பாதுகாப்பும் அவசியமாகின்றது. அதற்கேற்ற வகையிலே எமது திட்டம் நடைபெறும். 

அடுத்த சிவனொளிபாதமலை பருவ காலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் ஆரம்பமாகும். அதற்கு முன்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை சீர் செய்து வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவித்தார். 

விரைவில் நல்லத்தண்ணி நகர் அபிவிருதித்தி தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நகர வர்த்கர்களையும் கொழும்பிற்கு அழைத்து கலந்துரையாடலொன்று நடத்துவதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.