விராதிற்கு; பிடிவிராந்து




மியன்மாரின் பின்லாடன் என அழைக்கப்படும் சர்ச்சைக்குரிய பௌத்தமதகுரு அசின் விராதிற்கு எதிராக மியன்மார் காவல்துறையினர் பிடிவிராந்தை பிறப்பித்துள்ளனர்.
மியன்மாரின் ஜனநாயக தலைவர் ஆங்சான் சூ கி   குறித்த தெரிவித்த கருத்துக்களிற்காகவே மியன்மார் பொலிஸார் விராதிற்கு எதிராக பிடிவிராந்தை பிறப்பித்துள்ளனர்
அசின் விராதிற்கு எதிராக தேசதுரோக குற்றச்சாட்டை சுமத்தியுள்ள பொலிஸார் அவர் அரசாங்கத்திற்கு எதிராக வெறுப்பை தூண்ட முயன்றார் எனவும் தெரிவித்துள்ளார்.
அசின் விராதுவை தேடும் நடவடிக்கைகளை புதன்கிழமை ஆரம்பித்துள்ள பொலிஸார் மண்டலாய் பகுதியில் அவர் வசிக்கும் பௌத்த மடலாயத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்
எனினும் அவர் தற்போது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்
அசின் விராது  2003 இல் மியன்மாரின் இராணுவஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்ட பின்னர் 2012 இல்பொதுமன்னிப்பில் விடுதலையானவர் என்பதும் அதன் பின்னர் மியன்மாரில் சிறுபான்மை முஸ்லீம்களிற்கு எதிரான உணர்வுகளை தூண்டும் நடவடிக்கையை ஆரம்பித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அசின் விராது முஸ்லீம்களின் வர்த்தகநடவடிக்கைகளை புறக்கணிக்குமாறு தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றார் என்பதுடன் ரொகிங்யா முஸ்லீம்களை  சட்டவிரோத குடியேற்றவாசிகள் என தெரிவித்துவருகின்றார்.
2018 முதல் முகநூலில்  அவர் தடை செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது