அனுபவமா இளம் படையா - வெல்லப்போவது யார்?


இளம் வீரர்கள் நிறைந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், அனுபவம் வாய்ந்த வீரர்கள் நிறைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் இன்று ஐபிஎல் 2019 தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதிபெறும் இரண்டாவது அணி எது என்பதைத் தேர்வு செய்வதற்கான போட்டியில் மோதவுள்ளன.
இதுவரை நடந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர்களில் டெல்லி மற்றும் சென்னை இவ்விரு அணிகளும் 20 முறைகள் மோதியுள்ளன. அதில் சென்னை அணி 14 முறை வென்றுள்ளது. டெல்லி அணி 6 முறை வென்றுள்ளது.
டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் தலைவர் ஷ்ரேயாஸ் அய்யர், உலக கோப்பைக்கு தேர்தெடுக்கப்படவில்லையெனினும் தொடர்ந்து அசத்தி வரும் ரிஷப் பந்த், பிருத்வி ஷா, வேகப்பந்து வீச்சாளர் ரபாடா உள்ளிட்ட பலரும் இளம் வீரர்களாகவே உள்ளனர்.
ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தோனி, ஷேன் வாட்சன், ஹர்பஜன் சிங், டூப்லெஸிஸ், பிராவோ என மூத்த வீரர்களின் பட்டாளமே உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்படத்தின் காப்புரிமைROBERT CIANFLONE/GETTY IMAGES
இந்த தொடரில் பெரும்பாலான போட்டிகளில் டெல்லி அணியின் சார்பாக பிரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் ஆகிய இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கியுள்ளனர்.
புதன்கிழமையன்று நடந்த மிக பரபரப்பான எலிமினேட்டர் சுற்று போட்டியில் ஹைதராபாத் அணியை வென்ற டெல்லி அணி இன்று விசாகப்பட்டினத்தில் நடக்கும் இறுதி போட்டிக்கான தகுதி சுற்றுப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சந்திக்கிறது.
முன்னதாக சென்னையில் நடந்த முதல் தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியிடம் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணி தோற்றது.
இலங்கை
இலங்கை
மூன்று முறை ஐபிஎல் கோப்பையை வென்றுள்ள சென்னை அணி பல முறை இறுதிப் போட்டிகளிலும் விளையாடியுள்ளது.
இன்றைய போட்டியில் டெல்லி அணி வென்றால் ஐபிஎல் தொடரில் தனது முதல் இறுதிப் போட்டியில் விளையாடும்.
ரிக்கி பாண்டிங் பயிற்சியாளராக உள்ள டெல்லி அணியின் தலைவர் ரிஷப் பந்த் இளங்கன்று பயமறியாது என்பதுபோல விளையாடி சாத்தியமற்ற சூழலில்கூட சில போட்டிகளில் வெற்றியைத் தேடித் தந்துள்ளார்.
பந்துவீச்சு வலுவாக உள்ள இந்த அணிக்கு வீரர்களின் அனுபவமின்மை ஒரு பெரும் சவாலாகவே உள்ளது. அனுபவம் மிக்க சென்னை அணியின் மூத்த வீரர்களை அவர்கள் இன்று எதிர்கொள்ள வேண்டும்.
டெல்லி அணியின் பந்து வீச்சாளர்கள் விக்கெட்டுகள் எடுத்தாலும் ட்ரெண்ட் போல்ட் தவிர பிறர் அதிக ரன்களை வாரி வழங்குகின்றனர். இந்த அணியின் முக்கிய பலமாக பேட்டிங் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்படத்தின் காப்புரிமைPTI
ஆனால், சென்னை அணிக்கு பேட்டிங் பந்துவீச்சு என இரண்டுமே வலுவாக உள்ளது. இருந்தபோதிலும் சமீபத்தில் அதிகமான தோல்விகளை சென்னை சந்தித்தது.
விசாகப்பட்டினத்தில் புதன்கிழமை நடந்த போட்டியில் ஹைதராபாத் சன் ரைஸர்ஸ் அணியை வென்ற தன்னம்பிக்கையுடன், அதே மைதானத்தில் இன்று சென்னை எதிர்கொள்கிறது சென்னை அணி.
சென்னை அணியோ சொந்த மண்ணிலேயே மும்பை அணியிடம் தோல்வியைச் சந்தித்தது. அதன் தொடக்க ஆட்டமும் சமீபத்திய போட்டிகளில் அவ்வளவு ஒன்றும் சிறப்பாக இல்லை.
அந்த வகையில் நடுவரிசை பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா மீது எதிர்பார்ப்பு கூடியுள்ளது. முடிவுகள் எப்படி இருக்கும் என்று இன்று இரவு தெரிந்துவிடும்.