தமிழ் எழுத்தாளரும் நாவலாசிரியருமான தோப்பில் முகம்மது மீரான் காலமானார்

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரும் நாவலாசிரியருமான தோப்பில் முகம்மது மீரான் வெள்ளிக்கிழமை (மே 10ஆம் தேதி) காலமானார். அவருக்கு 74 வயது.  தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டத்தில் வசித்த அவருக்கு உடல்நிலை குன்றியதை அடுத்து அவர் தமது வீட்டிலேயே உயிர் நீத்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.
கன்யாகுமரியின் தேங்கா பட்டணத்தில் பிறந்த திரு மீரான், சமூக மாற்றம், பாகுபாடு போன்ற தலைப்புகளைச் சார்ந்த புதினக் கதைகளை எழுதியிருக்கிறார். 1998ஆம் ஆண்டில் ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’ என்ற நூலை அவர் வெளியிட்டார். ‘துறைமுகம்’, ‘கூனன் தோப்பு’ உள்ளிட்ட பல்வேறு நாவல்களை எழுதியிருக்கிறார். ‘சாய்வு நாற்காலி’ என்ற நூலுக்கு 1997ஆம் ஆண்டு அவருக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.


--- Advertisment ---