சவாலே சமாளி

“எனக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை வரட்டும். அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கின்றேன்.”
– இவ்வாறு சவால் விடுத்துள்ளார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.
நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்தன தேரரின் தலைமையில் பொது எதிரணியினரின் ஆதரவுடன் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“நம்பிக்கை இல்லாத எந்த வேலையையும் நான் இதுவரை செய்ததில்லை. முஸ்லிம் பெயரைக் கொண்டு தீவிரவாதிகள் செயற்பட்டதால் எங்களையும் அதனுடன் தொடர்புபடுத்த பலர் படாத பாடு படுகின்றனர். ஆனால், இனவாத பின்னணி கொண்ட அந்த முயற்சிகள் வெற்றியடையாது. அவர்கள் சொல்வதை நிரூபிக்க முடியாது. நம்பிக்கையில்லாப் பிரேரணை வரட்டும். அதனை எதிர்கொள்ள நான் தயாராகவே இருக்கின்றேன்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.