அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது ராஜபக்ஷேக்களிடம் விசாரியுங்கள்:

நாட்டில் அரங்கேற்றப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக அப்பாவி முஸ்லிம் மக்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரிக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் தற்போதைய பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அடிப்படைவாதத்தை மையமாகக் கொண்டு ஒரு குழு ஈடுபட்டிருக்கையில், அதற்காக முஸ்லிம் சகோதர்கள் பழிவாங்கப்படுவதும், மன ரீதியில் பாதிக்கப்படுவதும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாகும் எனத் தெரிவித்தார்.
மேலும், தமிழினம் இம்சிக்கப்படுவதை இராணுவம் மகிழ்ச்சியோடு பார்க்கிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இராணுவம் இவ்வாறு மகிழ்வுடன் ஒரு இனத்தை அடக்க முயல்கின்றமையானது இவ்விடயங்களின் பின்னணியில் இராணுவம், புலனாய்வு துறை மற்றும் முன்னாள் ஜனாதிபதியின் அணியினர் காணப்படுகின்றனர் என்பதை வெளிப்படுத்துகிறது.
எனவே, அப்பாவி முஸ்லிம்களை வருத்தாது, முன்னாள் ஜனாதிபதி உள்ளிட்ட அணியினரை விசாரித்து உண்மையை கண்டறியுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்


--- Advertisment ---