மாணவி நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்பு!

மூன்று நாட்களாகக் காணாமல்போயிருந்த பதுளையிலுள்ள பிரபல பாடசாலை மாணவி ஒருவர் இன்று காலை நீர்த்தேக்கத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பதுளை, மெத பத்தன பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய லக்சிகா மதுவந்தி என்ற மாணவியே சடலமாக மீட்கப்பட்டவராவார்.
கடந்த 14ஆம் திகதியன்று குறித்த மாணவி காணாமல்போயிருந்த நிலையில், அவரது உறவினர்கள் கந்தகெட்டிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்திருந்தனர்.
இதையடுத்துப் பொலிஸாரும் பிரதேச மக்களும் ஒன்றிணைந்து மேற்கொண்ட தேடுதலின்போது குறித்த மாணவி பயன்படுத்தியிருந்த பொருட்கள் சில லொங்கல்ல நீர்த்தேக்கத்துக்கு அருகிலுள்ள புதர் ஒன்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இதன்​போது அங்கு தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டபோது, மாணவியின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளாரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்பது தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


--- Advertisment ---