திருக்கோவில் மர்மமாகக் கொல்லப்பட்ட பெண்ணின் உடலம் தோண்டப்பட்டது

திருக்கோவில்,வினாயகபுரத்தில் மர்மமாகக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சடலம் இன்று அக்கரைப்பற்று நீதிபதி பெருமாள் சிவக்குமார் முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டது. குறித்த உடலம் பிரேதப் பரிசோதனைக்காக அம்பாரை சட்ட வைத்திய அதிகாரிக்கு அனுப்ப்பட்டது.

குறித்த பிரதேசத்தில் காணமல் போனதாகச் சந்தேகிக்கப்படும் பெண் புதைக்கப்பட்ட இடத்திலிருந்து துர்நாற்றம் வீசுவதாக பொது மக்களால் தெரிவிக்கப்பட்ட புகாரை அடுத்து, இந்த நடவடிக்கை மேற.கொள்ளப்பட்டுள்ளது.  குறித்த சம்பவத்துடன் தொடர்புற்ற யாரும் இதுவரைக் கைது செய்யப்படவில்லையெனத் தெரிகிறது.
(முந்தைய செய்தி)
திருக்கோவில் பொலிஸ்பிரிவுகுட்பட்ட விநாயகபுரம் பகுதியில் பெண் ஒருவர் திங்கட்கிழமை நண்பகல் முதல் மர்மமான முறையில் மாயமாகியுள்ளதாக திருக்கோவில் பொலிசில் பெண்ணின் கணவர் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவது யாதெனியில், திருக்கோவில் விநாயகபுரம் 02 பாடசாலை பிரதான வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் குறித்த பெண் தனது மகளின் 2 வயது குழந்தையுடன் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில் குறித்த பெண் அயல் வீட்டுக்குச் 11.30 மணியளவில் சென்று இருந்த வேளை தனது வீட்டில் நாய் குரைப்பதைக் கேட்டு வீட்டைப் பார்ப்பதற்காக சென்றுள்ளார். இந்நிலையில் அங்கு வயல் வேளை முடித்து 12.30 மணியளவில் வீடு திரும்பிய பெண்ணில் கணவரான சண்முகநாதன் கிருபைராசா என்பவர் வீட்டு மண்டபத்தில் குழந்தை தனியாக அழுது கொண்டு இருப்பதைப் கண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு மனைவினை அயல் வீடுகள் மற்றும் உறவினர்கள் வீடுகள் என தேடியுள்ளார் ஆனால் மனைவி எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் திருக்கோவில் பொலிசாருக்கு கணவரால் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடமத்திற்கு விரைந்த திருக்கோவில் பொலிசார் மற்றும் உளவுத்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் பொலிசாரும், குடும்பத்தினரும் பெண்ணைத் தேடி வருகின்றனர்
இவ்வாறு மர்மமான முறையில் மாயமாகியுள்ளவர் திருக்கோவில் விநாயகபுரம் 02 பாடசாலை வீதியைச் சேர்ந்த வெற்றிவேல் கனகம்மா (மலர்) 53 வயதுடைய மூன்று பிள்ளைகளில் தாயாவார்.


Advertisement