மசூதி கட்ட தடை

பழமைவாய்ந்த நகரமான ஆக்சம் கிறிஸ்தவர்களின் புனித இடமாக கருதப்படுகிறது. இறைவனால் மோசேயிடம் ஒப்படைக்கப்பட்ட 10 கட்டளைகள் துறவிகள் பாதுகாப்பின் கீழ் அங்கு இருப்பதாக நம்பப்படுகிறது.
அந்த நகரத்தில் இஸ்லாமியர்கள் தொழுகைக்காக மசூதி கட்டவேண்டும் என சில இஸ்லாமிய அமைப்புகள் தொடர்ந்து பிரசாரம் செய்து வருகின்றன. ஆனால் இது கிறிஸ்த்தவ தலைவர்களால் மறுக்கப்பட்டு வருகிறது. இதை அனுமதிப்பதை விட உயிரை விடுவது மேல் என கூறுகின்றனர்.
ஆக்சம் எங்களுடைய புனித இடம். எப்படி இஸ்லாமியர்களுக்கான புனித இடத்தில் கிறிஸ்த்தவ ஆலயம் கட்ட தடையோ அதேபோல் இங்கு ஒரு மசூதியும் இருக்கக்கூடாது என அங்கிருக்கும் திருச்சபையின் உதவி தலைவர் காடெஃபா மெர்ஹா கூறியுள்ளார்.
"ஆக்சம் இஸ்லாமியர்களுக்கு நியாயம் வேண்டும்" என்று கோஷத்தின் கீழ் பிரசாரம் செய்கின்றனர்.
ஆக்சம் பழமைவாய்ந்த நாகரிகத்தில் ஒன்று, அதனுடைய மத சகிப்புத்தன்மையே புகழ் வாய்ந்தது. இதனால் ஆக்சத்தில் நடக்கும் இந்த கருத்து வேறுபாடு மிகவும் வேதனையளிப்பதாக சிலர் கூறுகின்றனர்
எத்தியோப்பியாவின் இந்த நகரத்தில் மசூதி கட்ட தடை- இது தான் காரணம்
சுமார் கிபி 600 ல் இஸ்லாம் தோன்றியபோது பிற அரசர்களால் தவறாக நடத்தப்பட்ட இஸ்லாமியர்களை ஆக்சம் அரசர் இருகரம் கூப்பி வரவேற்று அரபு நாடுகளுக்கு வெளியில் இஸ்லாமியர்களுக்கு முதன்முறையாக இடம் கொடுத்தார்.
இன்று ஆக்சம் மக்களில் 73000 பேர் அதாவது 10 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள் மற்றும் 85 சதவீதம் பழமைவாத கிறிஸ்த்தவர்கள் மற்றும் 5 சதவீதம் பிற கிறித்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
”இஸ்லாமியர்களுக்கு பிரார்த்தனை கூடம் வழங்க வேண்டும் என்று பல தலைமுறைகளாக கிறித்தவர்களுக்கு சொந்தமான வீடுகளை வாடகைக்கு எடுத்துள்ளோம்” என 40 வயதான இஸ்லாமியர் அப்து முகமது அலி கூறியுள்ளார்.
”இப்போதைக்கு எங்களுக்கு 13 தற்காலிக மசூதிகள் உள்ளன. வெள்ளிகிழமைகளில் எங்களுடைய பிரார்த்தனைகளை ஒலிபெருக்கியில் கேட்டுவிட்டால் நாங்கள் அன்னை மேரியை அவமதிக்கிறோம் என கூறுவார்கள்” என்றார்.
”சில இஸ்லாமியர்கள் மசூதி இல்லாததால் திறந்தவெளியில் பிரார்த்தனை செய்கிறார்கள்” என 20 ஆண்டுகளாக வசித்து வரும் பாரம்பரிய மருத்துவர் ஆஸிஸ் முகமது கூறியுள்ளார்.
மேலும் ”இங்கே இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் ஒன்றாக வாழ்கிறோம். கிறித்தவர்கள் நாங்கள் பிரார்த்தனை செய்வதை தடுக்கவில்லை. ஆனால் கூடம் இல்லாததால் தெருவில் பிரார்த்தனை செய்ய வேண்டியுள்ளது. அதனால் எங்களுக்கு மசூதி வேண்டும்” என கூறினார்.
இந்த விஷயம் இரு சமூகத்தின் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அது பழமைவாத கிறித்தவர் என்னுடைய தகவல்களை தெரிந்துக்கொண்டே பேசினார். அதேசமயம் ஒரு இஸ்லாமிய தந்தைக்கும் ஒரு கிறித்தவ தாய்க்கும் பிறந்த ஆஸிஸ் இதை பற்றி வேறு எதுவும் பேசவில்லை. `இங்கே ஒருவருகொருவர் பயப்படுவார்கள்` என கூறினார்.
50 வருடத்திற்கு முன்பு இது போன்று ஒரு சம்பவம் நடந்தபோது ஹைலி செலஸ்ஸி ஆட்சியில் இருந்தார்.
இந்த நகரத்தின் முன்னாள் தலைவர் இரு சமூகத்தினருக்கும் இடையே சமாதானம் செய்ய இஸ்லாமியர்களை 15 கிலோ மீட்டர் தள்ளி உகிரோமரேவில் மசூதிகளை கட்ட அனுமதியளித்தது.
women in wukiro maray
உகிரோமரேவில் இப்போதைக்கு 5 கூடம் உள்ளது. ஆனால் எங்களுக்கு ஆக்சத்தில் வேண்டும். நாங்கள் அவர்களை கட்டாயப் படுத்த முடியாது. இங்கே அமைதியாக வாழ்வது தேவையான ஒன்று என பிரார்த்தனையின்போது இஸ்லாமியர்களுக்கு சமைத்து தரும் கெரிய மீசட் கூறியுள்ளார்.
இரு சமூகமும் ஒற்றுமையாக வாழ்கிறது மேலும் இரு சமூகத்தினரும் அப்ரகாமிய சிந்தனை கொண்டவர்கள் என காடெஃபா கூறியுள்ளார்.
அவரின் நண்பர் ஒரு இஸ்லாமியரே ஆவார். இருவரும் ஒன்றாகத்தான் திருமணம், இறுதிச்சடங்கு மற்றும் பிற நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வர்.
”இந்த மசூதி கட்ட வேண்டுமென்ற எண்ணம் எத்தியோப்பியாவின் பிற பகுதியில் வாழும் இஸ்லாமியர்களின் எண்ணம் என நான் நினைக்கிறேன்”.
பழமைவாத கிறித்தவர்கள் ஆக்சத்தின் புனித்தைக் காப்போம் என்று தங்கள் முன்னோர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீற மாட்டோம் என உறுதி எடுத்தார்.
”ஒருவேளை இங்கே மசூதி கட்டினால் ,நாங்கள் இறந்துவிடுவோம். இது எங்கள் காலத்தில் இது நடக்காது. எங்களுக்கு அது இறப்புதான். ஒருவருக்கொருவர் மரியாதை அளித்தே நாங்கள் நூற்றாண்டுகளாக வாழ்ந்து வருகிறோம்”.
ஆர்க் ஆஃப் கவனெண்ட் இருக்கும் 7500 வருடங்கள் முன்பு உருவாக்கப்பட்ட இடத்தில் கிறித்தவ பாடல்களே ஒலிக்க வேண்டும் என பழமைவாய்ந்த கிறிஸ்த்தவர்கள் நம்புவார்கள்.
amsale sibuh
ஆர்க் ஆஃப் கவனெண்ட் இருக்கும் இடத்தில் கிறித்துவ நம்பிக்கைகளை நம்பாத மதம் இருக்க கூடாது.அப்படி இருந்தால் நாங்கள் உயிரை இழந்துவிடுவோம் என கிறித்தவ பாதிரியார் அம்சல் சிபு இது குறித்து விளக்கம் அளித்தார்.
இரண்டு மதங்களும் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதை தவிர அங்கு இருக்கும் நிர்வாகிகள் வேறு எதுவும் கருத்து கூறவில்லை.
ஹைலி செலஸ்ஸி போலவே இன்றைய பிரதமர் அபி அஹமதின் தந்தை இஸ்லாம் மதத்தை சார்ந்தவர், தாய் கிறித்தவர். அதனால் அவர் இந்த இடத்தின் புகழை குலைக்க மாட்டார்.
அந்த பகுதியின் இஸ்லாமிய அமைப்பு மசூதி கட்டுவது குறித்து கிறித்தவர்களிடம் பேச விரும்புவதாக தெரிவித்துள்ளது.


--- Advertisment ---