வெற்றி பயணத்தை தொடருமா இந்தியா?



இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று (வியாழக்கிழமை) மான்செஸ்டர் நகரில் நடைபெறவுள்ள போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் போட்டியிடுகின்றன.

இந்தியா பேட்டிங்டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, பேட்டிங்கை தேர்வு செய்தார்.இரண்டாவது விக்கெட்டை இழந்தது இந்தியாமேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்து வரும் இந்தியா, 20.4 ஓவர்களில் தனது இரண்டாவது விக்கெட்டை இழந்துள்ளது. ஜேசன் ஹோல்டரின் பந்துவீச்சில் 48 ரன்கள் எடுத்த கே. எல். ராகுல் ஆட்டமிழந்தார். 21 ஓவர்களில் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு இந்தியா 98 ரன்கள் குவித்துள்ளது. 
மேற்கு இந்திய தீவின் அதிக ரன் எடுத்த வீரரான ப்ரைன் லாரா விட கெய்ல் 59 ரன்கள் பின் தங்கி உள்ளார்.இந்திய கேப்டன் விராட் கோலி இன்னும் 37 ரன்கள் எடுத்தால் வேகமாக சர்வதேச போட்டியில் வேகமாக 20000 ரன் எடுத்த வீரர் ஆவார்.விராட் கோலி மேற்கு இந்திய தீவுகளுக்கு எதிரான கடைசி ஆறு போட்டிகளில் நான்கில் 100 ரன்களை தொட்டுள்ளார்.1992 பிறகு மேற்கு இந்திய தீவுகள் இந்திய அணியை உலகக்கோப்பை தொடரில் வென்றதில்லை.