முக்கிய நான்கு வழக்குகள் தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த உத்தரவு

முக்கிய 04 வழக்குகள்தொடர்பான விசாரணையை விரைவில் நிறைவு செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

சட்டமா அதிபரால் பதில் பொலிஸ் மா அதிபர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை, றகர் வீரர் வசீம் தாஜூதீன் படுகொலை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் உள்ளிட்ட நான்கு சம்பவங்கள் தொடர்பிலேயே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

சட்டமா அதிபரின் இணைப்பாளர் அரச தரப்பு சட்டத்தரணி நிசாரா ஜயரத்ன இதனைக் கூறியுள்ளார்.


--- Advertisment ---