முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்குத் தடை,தங்கொட்டுவயில்

வென்னப்புவ – தங்கொட்டுவை வாரச் சந்தையில் முஸ்லிம்கள் வியாபாரம் செய்வதற்கு வென்னப்புவ பிரதேச சபையினால் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான கடிதமொன்று வென்னப்புவ பிரதேச சபையின் தலைவர் சுசந்த பெரேராவினால் வெளியிடப்பட்டுள்ளது.
அந்தக் கடிதத்தில், கடந்த காலங்களில் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதல்களை அடுத்து வென்னப்புவ பிரதேசத்தில் இருக்கும் முஸ்லிம் மக்கள் தங்கொட்டுவை வாரச் சந்தைக்கு வர ஏனைய மக்களும், வியாபார சமூகத்தினரும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தனர்.
இதனையடுத்து வென்னப்புவ பிரதேசத்தில் அமைதியான சூழ்நிலையை ஏற்படுத்துவதற்காக தங்கொட்டுவை வாரச் சந்தையில் முஸ்லிம் வியாபாரிகள் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தற்காலிகமாகத் தடைசெய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Advertisement