மொட்டின் தலைமைப் பதவி

ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக எதிர்க்கட்சித் தலைவரும் குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ச நியமிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய மாநாட்டில் கட்சியின் நிறுவுநர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், கட்சியின் தலைவர் பதவிக்கு மஹிந்தவைப் பரிந்துரைக்கும் யோசனையை முன்வைத்தார். அந்த யோசனை ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
அதன்பின்னர் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைமைப் பதவியைப் பொறுப்பேற்ற மஹிந்த, “எங்களால் மட்டுமே நாட்டை ஆள முடியும்” என்று உரையாற்றினார்.


--- Advertisment ---