சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்காவிட்டால் ஐ.தே.க. மண்கவ்வும்


(க.கிஷாந்தன்)  
 
"ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவை ஐக்கிய தேசியக் கட்சி களமிறக்காவிட்டால் சுயேச்சையாக போட்டியிடுவோம்.'' என மக்கள் தேசிய ஒன்றியத்தின் அமைப்பாளர் சமீர பெரோ தெரிவித்தார்.

அட்டனில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"சஜித் பிரேமதாசவை இலங்கை நாட்டு மக்கள் கோருகின்றனர். நாமும் அதையே வலியுறுத்துகின்றோம்.

எனவே, சஜித் பிரேமதாசவை களமிறங்காவிட்டால் அது கோட்டாபாய ராஜபக்சவின் வெற்றியை உறுதிப்படுத்தும். அத்துடன், ஐ.தே.கட்சியின் கதையும் முடிந்துவிடும்.'

அத்தோடு, கோட்டாபாய ராஜபக்ச இந்த நாட்டின் புதிய தலைவரா? அவர் எவ்வாறு புதிய நாட்டை உருவாக்குவார். அவர்களின் காலத்தில் தான் இங்கிலாந்திலிருந்து இலங்கைக்கு குப்பைகள் கொண்டு வரப்பட்டது. இராணுவ பாதுகாப்பு தனியாருக்கு விற்கப்பட்டது. சீனாவிலிருந்து பாரிய அளவில் கடன் சுமை பெற்று இந்த நாட்டை கடன்கார நாடாக மாற்றியுள்ளனர்.

இவ்வாறான நபர் எவ்வாறு இந்த நாட்டின் ஜனாதிபதியாக வர முடியும் என இவர் கேள்வி எழுப்பினார்.