களுவாஞ்சிகுடியில்,கருத்தரங்கு

பாறுக் ஷிஹான்  

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாபெரும் விழிப்புணர்வு கருத்தரங்கு களுவாஞ்சிக்குடி இராசமானிக்கம் மண்டபத்தில் ஆரம்பமானது.

 திங்கட்கிழமை(12) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இக்கருத்தரங்கில் தமிழ் மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கவும் சமகால அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெளிவுபடுத்தி உரையாற்றினார்.

அத்தோடு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏதும் செய்யவில்லை? தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசுக்கு முட்டுக் கொடுக்கின்றதா? போன்ற பொய் உரைகளின் உண்மைத்தன்மை தொடர்பாக விளக்கமளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


Advertisement