#அஹதிய்யா பரீட்சை - 2020!

#அஹதிய்யா பரீட்சை - 2020!

📌 இலங்கை பரீட்சைத் திணைக்களத்தினால்,

இஸ்லாமிய சன்மார்க்க அஹதிய்யா, அல்குர்ஆன் பாடசாலை இறுதிச் சான்றிதழ் பரீட்சை - 2017 (2020) க்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.

தகைமைகள்.-

இப்பரீட்சைக்காக விண்ணப்பிக்கும் ஒவ்வொரு பரீட்சார்த்தியும் இதன் கீழ்க் குறிப்பிடப்பட்டுள்ள
தகைமைகளில் ஏதேனுமொன்றைப் பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.

1. முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில், பதிவு செய்யப்பட்ட அஹதிய்யாப் பாடசாலையொன்றில் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர்களாயிருத்தல்.

அல்லது

2 முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில், அங்கீகரிக்கப்பட்ட சிரேஷ்ட தர அல்குர்ஆன் மத்ரஸா பாடத்திட்டத்தைப் பூர்த்தி செய்த மாணவராயிருத்தல்.

அல்லது

3 இலங்கைப் பரீட்சைத் திணைக்களத்தினால் நடாத்தப்படும் க.பொ.த. (சா.த.) பரீட்சையில் இஸ்லாம் அல்லது
அரபு பாடத்தில் சித்தியடைந்தவர்களாகவிருத்தல்

📌 முழுமையான விபரங்களுக்கு - அரச வர்த்தமானி 1/11/2019

📌 விண்ணப்ப முடிவுத் திகதி : 02.12.2019

(பதிவு செய்யப்பட்ட சகல அஹதிய்யாப் பாடசாலை கள், சிரேஷ்ட குர்ஆன் மத்ரஸாக்கள், மத்ரஸா பாடசாலை கள் என்பவற்றிற்கு விண்ணப்பப்பத்திரங்களும், அறிவுறுத்தல்களும் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பப் பத்திரங்களும், அறிவுறுத்தல்களும் கிடைக்கப் பெறாத
நிறுவனங்கள், ''பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு வெளிநாட்டுப் பரீட்சைகள் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம், பெலவத்தை, பத்தரமுல்லை"" என்ற முகவரியுடன் தொடர்பு கொண்டு 2019, நவெம்பர் மாதம் 22 ஆந் திகதிக்கு முன் விண்ணப்பப்படிவங்களை பெற்றுக் கொள்ளல்
வேண்டும்.)