டெல்லியில் உள்ள ராணி ஜான்சி சாலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஏற்பட்ட தீ விபத்தில் 32 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
பலி எண்ணிக்கை உயரலாம் என போலீஸ் தரப்பு தகவல்கள் கூறுகின்றன.
தீயணைப்பு வீரர்கள் இதுவரை குறைந்தது 50 பேரை மீட்டுள்ளனர்.
என்ன நடந்தது?
தீயணைப்பு படை துணை தலைமை அதிகாரி சுனில் செளதிரி, "600 சதுர அடி குறுகிய இடத்தில் தீ பற்றி உள்ளது. அந்த இடத்தில் பள்ளி பைகள், பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன," என்கிறார்.
தீயணைப்பு படை தலைமை அதிகரி, "இதுவரை 50 பேரை மீட்டுள்ளோம். பலர் தீ புகையின் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்," என்கிறார்.
தீ விபத்தானது காலை 5.22 மணிக்கு ஏற்பட்டுள்ளது.
தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மீட்புப் பணிகளைத் தீயணைப்பு படைவீரர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
27 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
லோக் நாயக் மருத்துவமனையின் மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் கிஷோர் குமார், காயமடைந்தவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக கூறுகிறார்.


Post a Comment
Post a Comment