அக்கரைப்பற்று மன்றினால், இனிய பாரதியின் விளக்க மறியல் நீட்டிப்பு

(எஸ்ரி.ஜமாலடின்)
2010ம் ஆண்டு காலப் பகுதிகளிலும்,அதற்கு முன்னரும் அக்ரைப்பற்று, திருக்கோவில் பிரதேசங்களில்,ஆட்கடத்தலுடன் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்டு ஏற்கனவே விளக்மறியலில் வைக்கபட்டிருந்த கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரான குருசாமி என்றழைக்கப்படும், இனிய பாரதி இன்றைய தினம் சிறைக்காவலர்கள் ஊடாக  அக்கரைப்பற்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார்.  

இவருக்கான பிணை விண்ணப்பத்தினை, சட்டத்தரணிகள் முன்வைத்திருந்த போதிலும், விசாரணைகள் நிறைவடையாத நிலையில், அக்கரைப்பற்று நீதிமன்றின் கௌரவ நீதிபதி  எதிர்வரும் 23ந் திகதி வரை இவரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


Advertisement