நீதிமன்ற செயற்பாடுகளில் கடந்த அரசாங்கம் தலையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது

நீதிமன்ற செயற்பாடுகளில் கடந்த அரசாங்கம் தலையிட்டுள்ளமை ரஞ்சன் ராமநாயக்கவின் குரல்பதிவுகளில் இருந்து தெரிய வந்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டின் நீதிமன்ற அமைப்பு, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் ஆகியன இலங்கையின் வரலாற்றில் ஒருபோதும் இல்லாத வகையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

நீதிபதிகள் தமது பதவி உயர்வு மற்றும் சலுகைகளுக்காக உரிய கல்வித் தகுதி அற்ற ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களின் காலில் விழும் நிலைமைக்கு சென்றுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.


Advertisement