அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் - ராகுல், 347 ரன்களை குவித்த இந்திய அணி

இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி தற்போது ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்களை குவித்தது.

டி 20 வெற்றி

IND Vs NZ: நியூசிலாந்துக்கு 348 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகோப்புப் படம்
விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.
இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி சாதனை படைத்தது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி ஹேமில்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
அறிமுக ஜோடி ப்ரித்வி ஷா மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோர் விளையாடினர்.

அடித்து ஆடிய ஸ்ரேயாஸ் - ராகுல்

IND Vs NZ: நியூசிலாந்துக்கு 348 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்தியாபடத்தின் காப்புரிமைGETTY IMAGES
Image captionகோப்புப் படம்
அகர்வால் 31 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நிலையிலும், ப்ரித்வி ஷா 21 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 103 ரன்களும், லோகேஷ் ராகுல் 88 ரன்களும் ( 64 பந்துகள், 3 பவுண்டரிகள், 6 சிக்சர்கள்) அடித்தனர்.
கேப்டன் விராட் கோலி 51 ரன்கள் அடித்தார்.
இதனையடுத்து 348 ரன்கள் எடுத்தால் வெற்றி இலக்கு நிர்ணயக்கப்பட்டது


Advertisement