விளக்கமறியல்,ஶ்ரீலங்கன் CEO மற்றும் அவரது மனைவிக்கு

ஶ்ரீலங்கன்

எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவியை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இருவரையும் பெப்ரவரி 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன மற்றும் அவரது மனைவி ஆகியோர் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி இருந்தனர்.

அவர்களின் சட்டத்தரணிகள் ஊடாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இன்று (06) காலை ஆஜராகி இருந்தனர்.

இந்நிலையில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் வைத்து அவர்கள் இருவரிடமும் வாக்குமூலம் பெறப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனை அடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.


Advertisement