ஆலயடிவேம்பு பிரதேச செயலர்,திட்டமிடல் உத்தியோகத்தர்களுக்கு விளக்க மறியல்


#ST.Jamaldeen நீதிமன்ற வளாகத்திலிருந்து.....

அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் ஆகியோர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சப்ரிகம வீதி அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் உள்ள ஒப்பந்த வேலைகளை பெற்றுக்கொடுப்பதற்காக சுமார்  3 இலட்சம் லஞ்சமாகப் பெறப்பட்ட வேளையில் கொழும்பிலிருந்து வருகை தந்த விஷேட இலஞ்ச ஊழல் ஆணைக்குழு பிரிவினரே இவர்களைக் கைது செய்துள்ளனர்.இன்று மாலை 7.30 க்கு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். ஹம்சா முன்னிலையில் குறித்த சந்தேக நபர்கள் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
இவர்களை, ஜீன் மாதம் 10ந் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதிபதி  சற்று முன்னர் உத்தரவிட்டார்.


Advertisement