விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன

2


2021 ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளில் முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்படிவம் கல்வி மற்றும் அறிவுறுத்தல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, முதலாம் தரத்துக்கு தமது பிள்ளைகளை அனுமதிக்க எதிர்பார்த்துள்ள பெற்றோர் கல்வியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய தயார் செய்யப்பட்ட விண்ணப்பப்படிவத்தை நிரப்பி, தமக்கு பொருத்தமான பாடசாலைகளின் அதிபர்களிடம் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னதாக கிடைக்கும்படி பதிவுத் தபாலில் அனுப்ப வேண்டும் என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தை கீழ்வரும் இணைப்பின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.Advertisement