நேபாள நாடாளுமன்றம் ஒப்புதல்,புதிய வரைபடத்திற்கு


உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பகுதிகள் என்று இந்திய அரசு கூறும், லிம்பியாதுரா, காலாபானி, லிபுலேக் ஆகிய பகுதிகளை தங்கள் நாட்டின் பகுதிகளாகச் சேர்க்கப்பட்டிருக்கும் நேபாளத்தின் புதிய அரசியல் வரைபடம் தொடர்பான சட்டத்திருத்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபை சனிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.

நேபாள நாடாளுமன்றத்தின் 258 உறுப்பினர்கள் இதற்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். ஒருவர்கூட இதற்கு எதிராக வாக்களிக்கவில்லை.

நாடாளுமன்ற மேலவையில் இந்த திருத்தம் இன்னும் ஒப்புதல் பெறவில்லை. மேலவையும் ஒப்புதல் அளித்தபின் நேபாள ஜனாதிபதி இதற்கு ஒப்புதல் அளிப்பார்.

SURVEY OF INDIAபடத்தின் காப்புரிமைSURVEY OF INDIA

இந்தியா - சீனா - நேபாளம்: பழைய பகையைத் தூண்டும் புதிய வரைபடம்

அன்பரசன் எத்திராஜன்

பிபிசி

இந்த வரைபடத்தில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள பகுதி, இமய மலையின் மேற்பகுதியில் உள்ள ஒரு சிறிய இடமாக இருந்தாலும், உலகின் மிகப்பெரிய சக்தியாக உள்ள இந்தியா- சீனா ஆகிய இரு பெரிய நாடுகளுக்கு இடையே பதற்றத்தை உருவாக்கிவிட்டது.

சர்ச்சைக்குரிய பகுதிகளில் இந்தியா போட்ட புதிய பாதை, அதை இந்தியா தனது வரைபடத்தில் சேர்த்ததும் பதற்றம் அதிகரிக்க காரணமாக அமைந்தது.

இதற்கு மேலே, சர்ச்சைக்குரிய காஷ்மீர் பகுதியின் வடக்கு லடாக் பகுதியில் இந்தியா மற்றும் சீன நாடுகளை சேர்ந்த ராணுவ வீரர்கள் பல வாரங்களாக தொடர்ந்து ஒருவரை ஒருவர் எதிர்கொள்ளும் நிலையில் இருந்தனர்.

இந்தியாவின் சில அதிகாரிகளும், ஊடகங்களும், நேபாளம் தனது வரைபடத்தை மாற்ற சீனாவே தூண்டுதலாக இருக்கிறது என்று கூறினாலும், அதற்கு சீனா இன்னும் பதிலளிக்கவில்லை.

எது தூண்டுதலாக அமைந்தது?

இந்தியாவும், நேபாளமும் 1,880 கி.மீ தூர எல்லையை பகிர்ந்துகொள்கின்றன. அதில் 98% எல்லைப்பகுதி தெளிவாக இருக்கிறது. ஆனால், மீதமுள்ள இடங்களான லிபுலேக் கணவாய், காலாபானி மற்றும் லிம்பியதுரா ஆகிய பகுதிகள் இன்னும் சர்ச்சைக்குரிய இடங்களாகவே இருக்கின்றன.

இந்த மூன்று பகுதிகளும் சேர்த்து 370 சதுர கி.மீ அளவு கொண்டதாக உள்ளதாக நேபாள அதிகாரிகள் கூறுகின்றனர்.

India and China: How Nepal's new map is stirring old rivalries

லிப்புலேக் கணவாய், இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தையும், சீனாவின் திபெத் பிராந்தியத்தையும் இணைப்பதாக உள்ளது.

இந்தியாவின் சமீபத்திய செயல்பாடுகள் நேபாளத்தையும், சீனாவையும் கோபமடைய வைத்துள்ளன. இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீர் பகுதியை, ஜம்மு, காஷ்மீர் மற்றும் லடாக் என மூன்றாக பிரித்து கடந்த நவம்பர் மாதம் தனது புதிய வரைபடத்தை வெளியிட்டது இந்தியா.

அந்த புதிய வரைபடத்தில்தான், நேபாளம் இந்தியாவிற்கு இடையேயான சர்ச்சைக்குரிய பகுதிகளை தங்கள் எல்லைக்குள் சேர்த்துக் கொண்டது இந்தியா.

"இருநாடுகளுக்கு இடையே உருவாகும் எந்த ஒரு சர்வதேச எல்லையும், இருநாடுகளின் பேச்சுவார்த்தையில் ஏற்படும் ஒப்பந்தங்களை பொருத்தே இருக்கும். அதைவிடுத்து, ஒரு நாடு மட்டுமே எடுக்கும் எந்த நடவடிக்கையும், சட்டப்படி அவர்களுக்கு எந்த உரிமையையும் அளிக்காது," என்கிறார் பிபிசியிடம் பேசிய நேபாளத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதீப் க்யவாலி.

1816ஆம் ஆண்டு போடப்பட்ட சகாலி ஒப்பந்தத்தைத் தவிர வேறு எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை என்றும், அந்த ஒப்பந்தத்தின்படி, இந்தியாவிற்கும் மேற்கு நேபாளத்திற்கும் இடையில் உள்ள அந்த மூன்று பகுதிகளும் நேபாளத்தையே சேரும் என்றும் அமைச்சர் கூறுகிறார்.

இதற்கு பதிலடி அளிக்கும் விதமாக, கடந்த மாதம், சர்ச்சைக்குரிய பகுதிகளையும் இணைத்தபடி நேபாளம் தனது புதிய வரைபடத்தை வெளியிட்டது.

இதற்கு இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில், "நேபாள அரசு, அநியாயமான முறையில் இவ்வாறு வரைபடம் வெளியிடுவதை தவிர்க்க வேண்டும். இந்தியாவின் இறையாண்மையையும், எல்லைப்பகுதியையும் மதிக்க வேண்டும்," என்று குறிப்பிட்டு இருந்தது.

நிலம் யாருக்கு சொந்தம்?

1816ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியுடன் நடந்த போரில் தோற்ற பிறகு, நேபாளம், தனது மேற்குப்பகுதியில் உள்ள சில இடங்களை அவர்களிடம் ஒப்படைத்தது.

இதைத்தொடர்ந்து போடப்பட்ட சகாலி ஒப்பந்தம், இந்தியாவிற்கான நேபாளத்தின் எல்லை என்பது காலி நதியில் தொடங்கும் இடத்தில் இருந்து பிரிவதாக குறிப்பிட்டுள்ளது.

காலாபாணி பகுதியில் இந்தியப் படைகள் முகாம் அமைத்ததாக கூறப்படுகிறது.
Image captionகாலாபாணி பகுதியில் இந்தியப் படைகள் முகாம் அமைத்ததாக கூறப்படுகிறது.

ஆனால், அந்த இடத்தில்தான் இருநாடுகளுக்கும் இடையிலான கருத்து வேறுப்பாடு உள்ளது.

அந்த ஒப்பந்தத்தில் நதியின் துல்லியமான இடம் குறித்த குறிப்புகள் இல்லை என்றும், பிற்காலத்தில், பல மேம்பட்ட முறைகளில் வரைபடங்கள் உருவாக்கப்பட்டுவிட்டன என்றும் இந்தியா கூறுகிறது.

கடந்த சில வாரங்களில், இருநாடுகளுக்கும் இடையிலான 'வரைபடப்போர்' காரணமாக, இரு தரப்பிலும் தேசியவாத கருத்துகள் அதிகமாக பேசப்பட்டன. நேபாளமும், காலாபானி பகுதியில் இந்தியா குவித்துள்ள வீரர்களை பின்வாங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

"எல்லைப்பகுதி தொடர்பான தேசியவாத கருத்துகள் தொடர்ந்து வெளிவருவது இருநாட்டிற்கும் இடையேயான உறவுக்கு நல்லதல்ல" என்கிறார், நேபாளத்திற்கான முன்னாள் இந்திய தூதர் ராகேஷ் சூட்.

நிதர்சனம் என்னவென்றால், கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக, குறிப்பிடப்பட்ட அந்த மூன்று இடங்களுமே இந்தியாவின் கட்டுப்பாட்டில்தான் இருக்கின்றன. தற்போது அங்கு வசிக்கும் மக்கள் இந்திய பிரஜைகளாக, இந்தியாவிற்கு வரி செலுத்திக்கொண்டு, இந்திய தேர்தலில் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

கடந்த பல ஆண்டுகளாக, நாட்டில் ஏற்பட்டு வந்த அரசியல் சூழல், மாவோயிஸ்ட்கள் முன்னெடுத்த கிளர்ச்சி ஆகிய காரணங்களால், இந்தியாவுடனான இந்த எல்லை விவகாரம் குறித்து இதுநாள் வரையில் பேச முடியாமல் போனது என்கிறது நேபாளம்.

நேபாள நாட்டின் முக்கியத்துவம்

பல ஆண்டுகளாக, இந்தியாவின் ஏற்றுமதி பொருட்களை சார்ந்து நேபாளம் இருந்துவந்தது. அதேபோல, நேபாளத்தில் நடக்கும் பல விவகாரங்களிலும், இந்தியா முக்கிய பங்கு வகித்தது. கடந்த சில ஆண்டுகளாக, நேபாளம் இந்தியாவிடமிருந்து விலகிச் சென்றவுடன், அந்நாட்டிற்கான முதலீடு, தேவை மற்றும் கடன் ஆகியவற்றை சீனா பூர்த்தி செய்தது.

சீனாவின் சாலை திட்டமான பி.ஆர்.ஐ -க்கு நேபாளத்தை முக்கிய கூட்டாளியாக அந்நாடு பார்க்கிறது. மேலும், தனது உலக வர்த்தகத்தை மேம்படுத்தும் வகையில், நேபாளத்தின் உள்கட்டுமான திட்டங்களில் சீனா முதலீடு செய்ய விரும்புகிறது.

கடந்த ஆண்டு, சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாளத்திற்கு வருகை தந்தார். அதற்கு முன்னதாக, 1996ஆம் ஆண்டு, அப்போதைய சீன அதிபரான ஜியங் சேமினின் வருகை தந்துள்ளார்.

ஷி ஜின்பிங்கின் இந்த பயணத்தின்போது, இருநாடுகளும், தங்களை கூட்டாளிகளாக்கிக்கொண்டனர். இந்திய தேர்தலில் வாக்கு செலுத்தி வருகின்றனர்.

"நேபாளம், பல ஆண்டுகளாக இந்தியாவின் ஆளுகைக்கு கட்டுப்பட்டே இருந்துள்ளது. இப்போது சீனாவின் வளர்ச்சியைத் தொடர்ந்து, அவர்களின் சந்தை மற்றும் பொருட்களை ஏற்றுக்கொள்ளும் ஒரு வாய்ப்பை நேபாளம் பெற்றுள்ளது. இதில் கேள்வி என்னவென்றால், நேபாளம் இந்தியா மற்றும் சீனா ஆகிய இரு நாடுகள் உடனான தனது நட்பை எப்படி சமமாக கையாளப்போகிறது என்பதுதான்," என்கிறார், ஷாங்காயில் உள்ள பூடான் பல்கலைக்கழகத்தின் தெற்காசிய வல்லுநரான, பேராசிரியர் டிங்கி ஷென்.

லிபுலேக் பகுதியில் இந்தியாவிற்கு பாதுகாப்பு பிரச்சனைகள் உள்ளன. 1962ஆம் ஆண்டு நடந்த இந்திய - சீனா போருக்குப் பிறகு, சீனா இந்த பாதை வழியே ஊடுருவ முடியும் என கவலைகொள்கிறது இந்தியா.

அதனால், வருங்காலத்தில், நாட்டின் பாதுகாப்பில் எந்த பிரச்சனையும் வரக்கூடாது என்பதற்காக இந்த வழித்தடத்தை மிகவும் திறமையான முறையில் பிடித்துள்ளது.

இந்திய - நேபாள எல்லையில் இருக்கும் காளி ஆறு பிரச்சனையின் ஓர் அங்கமாக உள்ளது.படத்தின் காப்புரிமைISHWAR RAUNIYAR
Image captionஇந்திய - நேபாள எல்லையில் இருக்கும் காளி ஆறு பிரச்சனையின் ஓர் அங்கமாக உள்ளது.

கடந்த மே மாதம், இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த வழித்தடத்தில் 80கி.மீ புதிய சாலைகள் அமைப்பதற்கான திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த மேம்பாடு, இந்தியாவிலிருந்து நேபாளத்திற்கு செல்லும் யாத்ரீகர்களின் பயண நேரத்தைக்குறைக்கும். ஆனால், இந்த நகர்வுதான் இருநாடுகளுக்கும் இடையே ராஜதந்திர முறையிலான நெருடலை உருவாக்கியது.

இந்த வழித்தடத்தில் பணியில் அமர்த்தப்பட்டுள்ள இந்திய வீரர்களை பின்வாங்க வேண்டும் என்று கூறி, காத்மண்டூவில் அமைந்துள்ள இந்திய தூதரகம் முன்பு, நூற்றுக்கணக்கானோர் போராட்டத்தில் இறங்கினர். சமூக வலைத்தளத்தில் மக்கள் #Backoffindia" என்ற ஹாஷ்டாங் மூலம் கருத்துகளை பதிவிட்டனர்.

"1976ஆம் ஆண்டு நாங்கள் வெளியிட்ட வரைபடத்தில் லிபுலேக் கணவாய், காலாபானி பகுதி ஆகியவை இருந்தன. அதில் லிம்பியதுரா மட்டும் தவறுதலாக விட்டுப்போய்விட்டது" என்கிறார், நேபாளத்தின் கணக்கீட்டுத்துறை முன்னாள் இயக்குநர் ஜெனரல் புத்தீ நாரயண் ஷ்ரேஷ்தா.

எல்லைப் பிரச்சனைக்கு முன்பே, இந்தியாவிற்கு எதிரான எண்ணம் நேபாளத்தில் நிலவியது.

அந்நாட்டின் மதேஷி சமூக கிளர்ச்சி 2015ஆம் ஆண்டு நடந்தபோது, கலவரம் வெடித்தது. அந்த கலவரத்தில் மக்களுக்கு அதிக உரிமைகளும், இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு தடையும் கோரப்பட்டது.

நேபாளத்தில் அப்போது இருந்த பொருளாதார நிலைக்கு, தான் காரணம் இல்லை என்று இந்தியா கூறினாலும், மிகச்சிலரே அதை நம்பினார்கள்.

ஐந்து மாதங்கள் நீடித்த தடையால், நேபாளத்தில் வாழ்க்கை மிகவும் மோசமானது. 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, அங்கு மீண்டும் கட்டடங்களை கட்டும் பணிகள் இந்த தடையால் வெகுவாக பாதிக்கப்பட்டு இருந்தன.

சீனா தேவையில்லாமல் உள்நுழைகிறதா?

எல்லை விவகாரத்தில், என்ன பிரச்சனை என்பது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் கேட்கவில்லை என்று நேபாள அரசு குற்றம்சாட்டியது. சீனாவின் ஆதரவைத்தொடர்ந்து, நேபாளத்திற்கு புதியதாக வந்துள்ள நம்பிக்கைதான், இந்தியாவிற்கு சந்தேகத்தை உருவாக்கியுள்ளது.