ஜே ஆர் தமது இளம் எம் பிக்களுக்கு அன்று சொன்னது என்ன? இன்று நடப்பது என்ன?



Varatharajan Mariampillai

1977 பொதுத் தேர்தல் முடிவடைந்த பின்னர் ஐக்கியதேசியக் கட்சியின் புதிய எம் பிக்களையும் ( அவர்களில் புதிய இளம் அமைச்சர்களாக வரவிருந்தவர்களையும்) ஜே ஆர் சந்தித்தார்.
அக்கூட்டத்தில் அவர் சொன்ன முக்கியமான அறிவுறுத்தல்களில் ஒன்று வடக்கிலும் கிழக்கிலுமிருந்து வரும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பற்றியது.
ஜே ஆர் அவர்களுக்கான அந்த விசேட செயலமர்வில் பேசும்போது,
சொன்னது வருமாறு:
வடக்குக் கிழக்கிலிருந்து இம்முறை ஒரே கட்சியைச் சேர்ந்த தமிழ் எம் பிக்கள் பதினெட்டுப் பேர் வருகின்றனர்.
அவர்களில் பத்துக்குமேற்பட்டவர்கள் அனுபவம் மிக்கவர்கள். வெஸ்ட் மினிஸ்டர் நடைமுறைகள் தெரிந்தவர்கள். கல்வியறிவாளர்கள்.
அவர்களிலும் பலர் சிறந்த வழக்கறிஞர்கள். சட்டம், அரசியல் பாராளுமன்ற நடைமுறை எனப் பலதும் தெரிந்தவர்கள். அவர்களிற் பலர் பாராளுமன்றத்திலுள்ள நூலகத்தைப் பாவிப்பவர்கள்.
உங்களில் அமைச்சர்களானவர்கள் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் சொல்லக் கூடியவகையில் ஆயத்தம் செய்யவும் பழகவும் வேண்டும். பாராளுமன்ற நூலகத்தைப் பயன்படுத்தப் பழகுங்கள் ‘
இப்படி அவர் புதியவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இந்த விடயம் அன்று செய்திகளாகவும் வந்துள்ளது. மூத்த ஊடகவியலாளர்கள் இதனை அறிவார்கள்.
அண்மையில் எனது நீண்ட நாள் நண்பரும் மூத்த சகோதர மொழி ஊடகவியலாளருமான ஒருவரிடம் நாட்டின் முக்கிய தலைவர் சொன்ன விடயத்தையும் இங்கு குறிப்பிடுவது இங்கு பொருத்தமாகும்.
அவர் சொன்னதை நான் இங்கு அப்படியே பகிராமல் சற்று மாற்றித் தருகிறேன்.
அவர் அந்த ஊடகவியலாளரிடம் பேசும்பொழுது,
‘நான் பாராளுமன்றம் போன காலத்தில் தமிழ் எம் பி மார் ஒவ்வொருவரும் படித்தவர்கள், சட்டவாதிகள் என வருவார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விடயத்தில் திறமைசாலிகள். இப்போ ஒருவர் அல்லது இருவர்தான் ‘என்று சொன்னாராம்.