கெபுன்கொடவில் நீரில் மூழ்கியவரைக் காணவில்லை

#Riswan.

துன்கல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கெபுன்கொட பிரதேசத்தில் நீரில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்.

நீரில் மூழ்கிய மற்றுமொருவர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள கடலில் 04 இளைஞர்கள் நீராடிக்கொண்டிருந்துள்ளனர். இதன்போதே, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதோடு, நீரில் மூழ்கிய மற்றுமொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று (17) பிற்பகல் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில், மினுவாங்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 18 வயதுடைய ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

துன்கல்பிட்டிய பொலிஸாரும் இலங்கை கடற்படையினரின் சுழியோடிகளும் இணைந்து காணாமல் போன இளைஞரை தேடி வருவதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணைகளை துன்கல்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.Advertisement