பொத்துவிலில்

#PotuvilNet.
பொத்துவில் மூன்றாம் கட்டை பகுதியில் கல் பங்களா என்று அழைக்கப்படும் இடத்தில் இன்று அதிகாலை 5.30 மணி அளவில் கார் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
சாரதிக்கு ஏற்பட்ட தூக்கம் காரணமாகவே இந்த விபத்து இடம் பெற்றிருப்பதாக சாரதி தெரிவித்தார்.
நான்கு பயணிகள் இந்த வாகனத்தில் பயணித்த போதும் ஒருவருக்கே காயம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மாத்தறையிலிருந்து பொத்துவில் ஊடாக வந்த பயணிகளே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Advertisement