முஜிபுர் ரஹ்மான் முன்னிலை




வெரிடே ரிசேர்ச் ஆய்வு அமைப்பின் Manthri.lk இணையத்தளத்தினால் 8 ஆவது பாராளுமன்றத்தில் உயர்ந்த செயல்திறனுக்கான விருதையும் சிறப்பான சிறந்த வரவுக்கான விருதையும் முஜிபுர் ரஹ்மான் பெற்றுள்ளார்.

அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான தரப்படுத்தலில் 23 ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.

Manthri.lk எனப்படுவது பாராளுமன்றத்தில் இருக்கும் 225 உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து ஆராயும் இணையத்தளமாகும். பாராளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்புப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கு வாக்களித்த பொது மக்கள் மீதுள்ள அவர்களது கடமையை எந்தளவு சிறப்பாக நிறைவேற்றுகின்றார்கள் என்பதை அவதானித்து அவர்களுக்கு மதிப்பெண்களை வழங்கும் ஒரு பொறிமுறையாக செயற்படும். 
பயன்திறன் மிக்க விதத்தில் பாராளுமன்ற நேரத்தை செலவிடுதல், வெளிநாட்டு கொள்கை தொடர்பான செயற்பாடுகள், பொருளாதார அபிவிருத்தி, மனித உரிமை, நல்லிணக்கம் உட்பட்ட 42 அம்சங்களை உட்படுத்தும் Manthri.lk முன்னேடுப்பு, பரிபூரணமானதொரு கட்டமைப்பின் கீழ் பக்கசார்பின்றி செயற்பட்டவாறு பாபராளுன்ற உறுப்பினர்களுடைய செயற்பாடுகளை மதிப்பீடு செய்தவண்ணம் தரப்படுத்தல்களை மேற்கொள்கிறது. 

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் இந்த தரப்படுத்தலில் முன்னிலைபெரும் முஸ்லிம் உறுப்பினருமாவார். இவர், 14 தலைப்புகளின் கீழ் 235 தடவை பாராளுமன்ற செயற்பாடுகளில் பங்கேற்றுள்ளார் என Manthri.lk குறிப்பிட்டுள்ளது. 225 உறுப்பினர்களில் முதலாவது பாராளுமன்ற பிரவேசத்தின்போதே அவர் 23 ஆம் இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளார். அவர் அங்கம் வகித்த கட்சி அடிப்படையில் 9 ஆவது இடத்திலும் கொழும்பு மாவட்டத்தில் 7 ஆம் இடத்தை பெற்ற பாராளுமன்ற உறுப்பினராகவும் காணப்படுகின்றார்.

Manthri.lk இணையத்தயளம் கொழும்பை ஸ்தலமாகக் கொண்டு இயங்கி வரும் அறிவுஜீவிகள் குழுமமொன்றாகிய வெரிடே ரிசேர்ச் ஆய்வு அமைப்பின் ஒரு உருவாக்கம் ஆகும். பொருளாதார, அரசியல், சட்டத்துறை, ஊடகம் போன்ற அம்சங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் வெரிடே ரிசேர்ச் அமைப்பின் Manthri.lk முன்னெடுப்பிற்காக இணையத்தள மேம்பாடு உட்பட்ட பல்வேறுபட்ட துறைசார் செயற்பாடகளில் ஈடுபட்டு வரும் சர்வதேச புகழ்பெற்ற ஸாபேரியன் அமைப்பின் ஒத்துழைப்பையும் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.