பதவி வெற்றிடம் ; அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை


2020.07.17 ஆம் திகதி வெuளியாகிய அரசாங்க வர்த்தமானி அறிவித்தலில் அரசாங்க மொழிபெயர்ப்பாளர் சேவை பதவி வெற்றிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மொழிபெயர்ப்பில் ஈடுபடும் மொழிகளின் அடிப்படையில் இச்சேவைக்கு 3 அடிப்படைகளில் ஆட்சேர்ப்புச் செய்யப்படுவர். 

1. சிங்களம்/தமிழ் - தமிழ்/சிங்களம் 
2.சிங்களம்/ஆங்கிலம் - ஆங்கிலம்/சிங்களம் 
3.தமிழ்/ஆங்கிலம் - ஆங்கிலம்/தமிழ் 

இது Class I MN6-2016 என்னும் சம்பளக்குறியீட்டுக்கு உரித்தான சம்பளத்தைக் கொண்ட பதவியாகும். அப்படியென்றால், இப்பதவிக்கு தெரிவாகும் ஒருவருக்கு முதலாவது மாதத்திலேயே - 

அடிப்படைச் சம்பளம் 43,940.00 
வாழ்க்கைச் செலவு படி 7,800.00 
விசேட படி 2,500 

என சேர்த்து 54,240 கிடைக்கும். என்றாலும் அத்தொகையில் இருந்து நியதிச்சட்ட கழிப்பனவுகள் கழிப்பட்ட பின்னர் மாதாந்தம் கையில் 51,000 ரூபா அண்ணளவாகக் கிடைக்கும். 

இது நிரந்தரமானதும், ஓய்வூதிய உரித்துக்குரிய  பதவியாகும். 

பொதுவான விடயங்களை தவிர்த்து இப்பரீட்சைக்கு விண்ணப்பிப்பதற்கான தகைமைகள் என்று பார்த்தால் முதலாவதாக கல்வித் தகைமை. 

விண்ணப்பிப்பவர் தான் தேர்ந்தெடுத்த இருமொழிகளிலும் சாதாரண தரத்தில் திறமைச் சித்தியைக் கொண்டிருக்க வேண்டும். அதாவது ஒருவர் தமிழ்/ஆங்கிலம் - ஆங்கிலம்/தமிழ் மொழிபெயர்ப்பாளருக்காக விண்ணப்பிக்கின்றார் என்றால் அவர் அவ்விரு மொழிகளிலும் சாதாரண தரத்தில் திறமைச் சித்தியைக் கொண்டிருக்க வேண்டும். 

அத்துடன், அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து ஏதாவதொரு பட்டத்தைப் பெற்றிருக்க வேண்டும். 

இப்பதவிக்கான வயதெல்லை 21 முதல் 40 வரை ஆகும். அதன்படி, 1999.08.24 இற்கு பின்னர் பிறந்தவர்களும் 24.08.1980 இற்கு முன்னர் பிறந்தவர்களும் இப்பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியாது. என்றாலும் ஏற்கனவே அரச சேவையில் உள்ளவர்களுக்கு இந்த வயதெல்லை பொருந்தாது. 

பரீட்சைக்கான கட்டணம் 600.00 ரூபா ஆகும். 

விண்ணப்பிப்பதற்கான இறுதித் திகதி 24.08.2020 ஆகும். 

விண்ணப்பப் படிவங்கள் வர்த்தமானியில் குறிப்பிடப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு
இணங்க அதே மாதிரியில் தயாரிக்கப்பட வேண்டும். 

பரீட்சை அவரவர் தெரிவு செய்யும் மொழி மூலத்துக்கு அமைய  மூன்று பாடங்களைக் கொண்டதாக அமையும். 

உதாரணமாக, ஒருவர் தமிழ்/ஆங்கிலம் - ஆங்கிலம்/தமிழ் மொழிபெயர்ப்பாளருக்காக விண்ணப்பிக்கின்றார் என்றால் அவர் பின்வரும் பாடங்களுக்கு தோற்ற வேண்டும். 

1. மொழிபெயர்ப்பு
2. ஆங்கில மொழி 
3. தமிழ் மொழி 
4. கிரகித்தல் 

இப்பரீட்சைக்கான விண்ணப்பம் சுமார் 8 வருடங்களின் பின்னர் கோரப்பட்டுள்ளதால் ஆர்வமும் தகைமையும் உடையோர் கண்டிப்பாக விண்ணப்பியுங்கள். 

ஆங்கில மொழி மூலமான வர்த்தமானி அறிவித்தல் மாத்திரமே வெளிவந்துள்ளது.