நாவலப்பிட்டிய நகரில்,


(க.கிஷாந்தன்)

 

நாவலப்பிட்டிய நகருக்கு இன்று (10.07.2020) வருகைதந்திருந்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.

 

அத்துடன், பொதுமக்களுடன் சிநேகப்பூர்வமாக கலந்துரையாடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, அவர்களின் குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

 

2020 ஆகஸ்ட் 05 ஆம் திகதி நடைபெறும் பொதுத்தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியின் கீழ் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஜனாதிபதி மாவட்டந்தோறும் பிரச்சாரப் பயணத்தில் ஈடுபட்டு வருகின்றார்.

 

இதன்படி கண்டி மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று களப்பயணம் மேற்கொண்டிருந்தார்.  இதன் முதற்கட்டமாக நாவலப்பிட்டியவுக்கு ஜனாதிபதி வருகைதந்தார்.

 

நாவலப்பிட்டிய ஜயதிலக்க மைதானத்தில் வந்திரங்கிய அவர், சர்வமத வழிபாட்டில் பங்கேற்றபின்னர், மக்களை சந்திப்பதற்கு சென்றார்.

 

நாவலப்பிட்டிய பேருந்து நிலையத்தில் சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி மக்கள் திரண்டிருந்தனர். ஜனாதிபதியை கண்டதும் ‘ஜனாதிபதி வாழ்க, ஜனாதிபதி வாழ்க’ என கோஷம் எழுப்பி தமது ஆதரவை வெளிப்படுத்தி - வரவேற்பளித்தனர்.

 

இதன்பின்னர் பலர் ஜனாதிபதியுடன் இணைந்து புகைப்படம் எடுத்துகொண்டனர். மக்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி குறைநிறைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கண்டி மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்தவும் பங்கேற்றிருந்தார். அவருக்கு ஆதரவாகவே இச்சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.