9 வது நாடாளுமன்றில் மூத்தவர் சம்மந்தன்,இளையவர் ஜீவன்

 

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட 11% இளைஞர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக நாடாளுமன்றத்தின் தகவல் தொடர்பு பிரிவு தெரிவித்துள்ளது.

25 முதல் 40 வயதுக்குட்பட்ட இருபத்தைந்து (25) உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர். அவர்களில் 04 உறுப்பினர்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள்.

21 உறுப்பினர்கள் 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள், அவர்களின்  09 உறுப்பினர்கள் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

அதிக எண்ணிக்கையிலான 67 உறுப்பினர்கள் 41-50 வயதுக்குள் காணப்படுகிறார்கள், 54 உறுப்பினர்கள் 51 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் எனக் கூறப்படுகிறது.

கட்சித் தலைவர்கள் சஜித் பிரேமதாச, அநுர குமார திஸாநாயக்க, பாட்டலி சம்பிக ரணவக்க, பழனி திகாம்பரம், மனோ கணேசன் ஆகியோர் இந்த வகைக்கு உட்பட்டவர்கள்.

69 வயதான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 37  பேர் 61-70 வயதிற்குட்பட்டவர்கள்.

பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது சகோதரர் சமல் ராஜபக்ச உட்பட ஒன்பது பேர் 71-80 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

வசுதேவ நாணயக்கார, சி.வி. விக்னேஸ்வரன், ஆர். சம்பந்தன் ஆகியோர் 81-90 வயதுக்கு இடைப்பட்ட  இடைப்பட்டவர்கள்.

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமனின் புதல்வர் ஜீவன் தொண்டமான் நாடாளுமன்றத்தின் இளைய உறுப்பினர், அதே நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் நாடாளுமன்றத்தின் வயது கூடிய உறுப்பினர்.Advertisement