'பிளாக் பாந்தர்' கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் புற்று நோயால் இறந்தார்



 பிளாக் பாந்தர்'a கதாநாயகன் சாட்விக் போஸ் மென் புற்றுநோய்யால் உயிரிழந்தார்

'பிளாக் பாந்தர்' திரைப்படத்தின் கதாநாயகன் சாட்விக் போஸ்மேன் குடல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார்.

43 வயதான அமெரிக்க நடிகர் சாட்விக் போஸ்மேன் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் உள்ள தனது வீட்டில் உயிரிழத்தகாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறிப்பிடுகிறது.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பே போஸ்மேன் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார், ஆனால் பொதுவெளியில் இது குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்த செய்தி ரசிகர்களையும் பாலிவுட் நட்சத்திரங்களையும் அதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது.

சாட்விக் உண்மையான போராளி என்று அவரின் குடும்பத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகஸ்ட் வில்சனின் 'மா ரைனெய்ஸ் பிளாக் பாட்டம்', மார்ஷல் மற்றும் டா 5 பிளட்ஸ் உள்ளிட்ட பல திரைப்படங்களை தனக்கு புற்று நோய் ஏற்பட்ட பிறகு சாட்விக் நடித்துள்ளார். அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சையின் போதே சாட்விக் படப்பிடிப்புகளுக்கு சென்றுள்ளார்.

அரசர் டி'சாலாவின் கதாபாத்திரத்தை பிளாக் பாந்தர் திரை படத்தில் ஏற்று நடித்தது மிக பெரிய பெருமையாக கருதப்படுகிறது. போஸ்மேன் பல துறைகள் சார்ந்த பிரபலங்களின் கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

2014ம் ஆண்டு பாடகர் ஜேம்ஸ் பிரவுன், 2013ம் ஆண்டு பேஸ் பால் விளையாட்டு வீரர் ஜாக்கி ராபின்சன் உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் படங்களில் போஸ்மேன் நடித்துள்ளார். இருப்பினும் 2018ம் ஆண்டு மிக பெரிய வெற்றி பெற்ற பிளாக் பாந்தர் திரைப்படம் உலகம் முழுவதும் பேசப்பட்டது.

வாக்கண்டாவின் அரசராக போஸ்மேன் நடித்த திரைப்படம் 1.3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் லாபம் ஈட்டியது. இந்த திரைப்பட இயக்குனர் உட்பட பல நடிகர்கள் கறுப்பினத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

''இளம் வயதினர், அனைத்து வசதிகளையும் உடையவர்கள், கறுப்பினத்தவர்கள்'' குறித்து இருந்த பிம்பத்தை இந்த திரைப்படம் மாற்றியுள்ளது என போஸ்மேன் கடந்த ஆண்டு தெரிவித்திருந்தார். ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் சூப்பர்- ஹீரோ திரைப்படமாக பிளாக்பாந்தர் திரைப்படம் விளங்குகிறது.

'பிளாக் பாந்தர்'a கதாநாயகன் சாட்விக் போஸ் மென் புற்றுநோய்யால் உயிரிழந்தார்
படக்குறிப்பு,

'பிளாக் பாந்தர்'a கதாநாயகன் சாட்விக் போஸ் மென் புற்றுநோய்யால் உயிரிழந்தார்

போஸ்மேன் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வந்த செய்தி பொது வெளியில் தெரியாமல் இருந்ததால் தற்போது பலரும் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் போஸ்மேன் மிகவும் எடை குறைந்து காணப்பட்டதால், ரசிகர்கள் பலர் கவலை தெரிவித்து வந்தனர்.

அமெரிக்க ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் பதவிக்குப் போட்டியிடும் கமலா ஹாரிஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் இவரது மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டிவைன் ஜான்சன், மார்க் ரஃப்பெல்லோ உள்ளிட்டோரும் தங்கள் இரங்கலை பதிவு செய்துள்ளனர்.